பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருக்குழியாய் உன்வயிற்றைக் கருதுகிறோம்; மனிதர்களின்

எருக்குழியாய் அதைமாற்ற எப்போது துணிந்தாய்நீ?

செங்கொடிகள் ஆடிவரும் சிவந்தமண் நகரத்தில் பூங்கொடிகள் எத்தனையோ புழுதிக்குள் புதைந்தனவே!

மண்தின்பார் கருவுற்ற மங்கையர்கள், இரக்கமின்றி மண்ணே, உன் மசக்கைக்கு மங்கையரைத் தின்றாயே!

நீயே வழங்கியதை

நீயே விழுங்குவதா? தாயே பிள்ளைகளின் தசைக்கறியை விரும்புவதா?

எத்தனை மாளிகைகள் இடுப்பொடித்துப் போட்டுவிட்டாய்! எத்தனை ஆலைகளை எலும்புக்கூ டாக்கிவிட்டாய்!