பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருேக்காற்று

வீசட்டும்...

நெஞ்சக் கதவைத் திறந்துவிடு நேசக் காற்று வீசட்டும்!

கண்கள் வளர்க்கும் தவறுகளை - உன்

காட்சியி லிருந்து விலக்கிவிடு! எண்ணம் திரட்டும் அழுக்குகளை - உன்

இதயத் திருந்து அகற்றிவிடு!

நெஞ்சக் கதவை திறந்துவிடு நேசக் காற்று வீசட்டும்!

விரக்தி உனக்கு வரலாமா? பொறுமை யோடு காத்திருந்து - நீ

புதுமை படைக்க வேண்டாமா?

நெஞ்சக் கதவைத் திறந்துவிடு நேசக் காற்று வீசட்டும்!

அண்டை வீட்டுச் சோதரர்கள் - பிற

அன்னியர் போல வாழ்வதுவா?

பண்டைய பரம்பரை இழிவுகளில் - ஏதும்

பாக்கி இன்னும் இருக்கிறதா?

நெஞ்சக் கதவைத் திறந்துவிடு நேசக் காற்று வீசட்டும்!