பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரகுமான் தொட்டில் ஆடாதா? கண்ணன் தவழ்ந்த கோகுல வீதியில் கர்த்தர் நடக்கக் கூடாதா? மனிதா, வளைவரிச் சங்கு பிறக்கும் கடலில்தான் வலம்புரி முத்தும் பிறக்கிறது! பளபளக்கின்ற பவழமும் அந்த அலைகடல்தானே கொடுக்கிறது!

[T]

இந்துமதம் இந்தியாவின் 'இதயம் என்றால் இஸ்லாமும் கிறித்தவமும் 'நுரையீரல்கள்! மனிதா! இந்துவா நீ? இணங்கி வா, பள்ளிவாசலில் நகாரை முழக்கு! இஸ்லாமியனா? இணைந்துவா, மாதாகோயிலில் மணியடிக்கப்போ! கிறித்தவனா நீ? எழுந்துவா, இந்துக் கோயிலில் அகல்விளக் கேற்று.

அருமை, அருமை! இறைவா உன் அருள்வழி காட்டல் இருளை