பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுட்டுவில் நீ சுருங்குவதா?

நிமிர்வாய் தமிழா, எழுவாய் - அட,

நீதான் உலகின் எழுவாய்!

உமியாய்ப் பறக்கும் பகைவாய் - நீ

உயிர்ப்பாய், புரட்சிப் புயலாய்!

எட்டுத் திசையும் புகழ்பொறித்தாய் - இன்று இருப்பதில் பாதியைப் பறிகொடுத்தாய்!

சுட்டுவிரல் நீ சுருங்குவதா? - உன்

சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?

இனம்மொழி காக்கக் கொடியுயர்த்து - நீ

இருப்பதைக் காக்கத் தோளுயர்த்து!

அனுமதி யாரிடம் பெற வேண்டும்? -நீ

ஆர்த்தெழுந் தால்தான் நிலைமாறும்!

தமிழன் ஆட்சி தமிழில் இல்லை - அட

தமிழுக்குக் கல்வியில் தலைமையில்லை!

தமிழன் கோயிலில் தமிழில்லை - சீ

தமிழன் வாயிலும் தமிழில்லை!

வேர்க்குணம் நமது இனமானம் - உன் விழிக்குள் வரட்டும் செவ்வானம்!

போர்க்குணம் நமக்கு உடையல்லவா - நாம்

புறநா னுற்றுப் படையல்லவா?