பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்னும் ஒரு சுதந்தரப் போர்

மண்ணின் மரபுகளை

மகத்தாகப் போற்றுதற்கு

கண்ணின் சுதந்தரத்தைக்

கருத்தாகப்பயிர் செய்தோம்!

தண்ணிரை வார்த்தால்

தவறி விளையுமென்று

கண்ணிரால் காத்தோம்;

கருக விட்டோமின்று!

தள்ளக் கூடாததைத்

தள்ளி வைத்துவிட்டு கொள்ளக் கூடாததைக்

கொண்ட தேசமிது!

புத்தனை காந்தியினை

புதுவெள்ளம் ஒதுக்கியதால்

இத்தரைத் தருமங்கள்

இடப்பெயர்ச்சி ஆகியது!

நீதியின் சாய்வுகளில்

நேர்மை ஓய்வெடுக்கும்;

பாதையின் சரிவுகளில்

பண்புகள் அடிசறுக்கும்!