பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைமைாழிலே தமிழ்தாடிே!

கோடுயர்ந்த மலைகளிலே கொடிமரங்கள் நட்டவனின் விடுகளே தமிழ்மொழியை விலக்கி வைக்கும் பெருங் கொடுமை!

வீட்டில் பழகும்மொழி

வேற்றுமொழி யானபின்பு ாட்டு மொழியைப் பற்றி ாம்பேசத் தகுதியுண்டா?

தாய்ப் பாலில் அன்னியமும் தாலாட்டில் அயல்மொழியும் நோய்போலப் பரவினால் ாலிந்துவிடும் தமிழ்ச்சாதி!

உலகமொழி அத்தனைக்கும் வற்றுமொழி தமிழ்தானே! வேற்றுமொழி அனைத்துக்கும் விதைமொழியே தமிழ்தானே!

தமிழகம் உனது அன்னைநிலம், தமிழினம் உனது தண்டுவடம்; தமிழ்உன் மூச்சின் மூலதனம் - நீ

தடைகள் தகர்க்கும் காளையினம்!