பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிலே!

மரபுக் கவிதைகளில்

மகசூலைப் பெருக்கியபின்

விரவும் புதுக்கவிதை

விதைக்கோட்டை ஆணவனே!

விடுகதையைப் பாடிவந்த

வெற்றிலைக் கவிஞர்களில்,

விடுதலையைப் பாடிவைத்த

வேள்விக் கவிஞன்நீ!

பலரது எழுச்சிவெறும்

பள்ளி எழுச்சியெனில், புலவனே, உன்எழுச்சி

புதிய படையெழுச்சி!

சிலரது வீழ்ச்சியிங்கே

சிறப்பின்றிப் போகிறது;

நிலத்தில் உன்வீழ்ச்சியோ

'நீர்வீழ்ச்சி ஆகியது!

உருகும் பனிக்கட்டியில்

உஷ்ணத்தை ஏற்றியநீ

திரளும் மழைச்சரத்தைத்

தீச்சரமாய் மாற்றியவன்!