பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவரி tốc6dab, ola!

எழுந்திரு இளந்தமிழா, இனம்மொழி காப்போம்வா! முழங்கிடு; முன்னே வா, முகவரி மீட்போம் - வா!

உன் மூச்சு தமிழ்க்காற்று உன் நாக்கு தமிழ் ஊற்று உன் நரம்பில் இனமானம்

உன்னெழுச்சி படையெழுச்சி!

தாய்மொழியில் பேசுவதைத்

தரக்குறைவாய் எண்ணுவதா? தாய் மொழியே வளர்ச்சிக்குத் தடையென்று சொல்லுவதா?

தாய்ப்பால் மறந்தவுடன் தமிழ்ப்பாலை மறக்கடித்து வாய்ப்பாலாய்ப் பிள்ளைகட்கு வணிகப்பால் ஊட்டுவதா?