பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியற்று வெளுத்திருந்த

விதவைப் பெண்ணின்

வெறும்நெற்றி யில்நீயே

பொட்டு வைத்தாய்!

வியர்வையினைச் சிந்துபவன்

"இருண்ட வீடு'

வெளிச்சமுறக் குடும்பவிளக்

கேற்றி வைத்தாய்!

உயர்புலவன் சுயமரியா

தைக்கா ரன்நீ!

உன்கைகளில் பாண்டியன்

பரிசு பெற்றான்!

அயர்வின்றி தமிழன்னை

கண்ணி மாற்றி

அவள்முகத்தில் நீ'அழகின்

சிரிப்பு சேர்த்தாய்!

முயற்சியுடன் தமிழியக்கம்

வளர்ப்பதற்கு முகாம்போட்ட இடம்தானே

'குறிஞ்சித் திட்டு!