பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையுன் தாரக மந்திரம் பலித்தது 'வந்தே மாதரம் வானைப் பிளந்தது!

பாரத தேவியை நிர்வாண மாக்கப் பரங்கியர் அவளது ஆடையைப் பறிக்கையில்,

கையற் றேங்கிய அன்னைக் காகக் கைராட் டையில் நூல்நூற் றவன்நீ!

பாதிநூல் தாய்க்குச் சேலையாய் ஆனது; மீதிநூல் கொடிக்குச் சீலையாய் ஆனது!

தந்தை உனது கைத்தடி யில்தான், தாயின் மணிக்கொடி முதலில் பறந்தது!