பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருதுருகர் வேந்தல்

‘விருதுகளை வேண்டாத விருதுநகர் வேந்தன் நீ! மருது பாண்டியரின் மாவீரம் உன்வீரம்!

சிறுமைகளைத் தீய்க்கவந்த சிவகாசித் தீக்குச்சி; சிறகுகளைத் தந்தவளோ சிவகாமி உன் ஆச்சி!

வாடிக் கிடந்தவனின் வயிற்றையும் மூளையையும் தேடிப்போய் நிரப்பி திசைகாட்டி ஆனவன்நீ!

அடுப்பெரியா வீடுகளின் அரும்புகட்குச் சோறுட்டி படிப்பறியாக் கூரைகளில் பட்டங்கள் வேய்ந்தவன்நீ!

"படிக்காத மேதை"இன்று பல்கலைக் கழகத்தில் படிக்கும் மேதைகட்குப் பாடநூல் ஆகின்றாய்!