பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெல்காஞ்சித் தேர்முடிை

அண்ணாநீ இயற்பெயரில்

அகர முதல்வன்;

அன்னைத் தமிழ்த்தாய்ஈன்ற

அரும் புதல்வன்!

விரலசைவில் இலக்கியங்கள்

பிறக்கும்; அண்ணா

விழியசைவில் ஒரு சேனை நடக்கும் பின்னால்!

குரலசைவில் இலட்சியத்தின்

முழக்கம்; கோட்டை

கொடியசைவில் நல்லாட்சி

செழிக்கும் தெற்குத்

தெருமுனைகள் கூடிவந்து

வணங்கி நின்ற

தென்காஞ்சித் தேர்முனையே!

திராவி டத்தின்

புவிஈர்ப்புத் தானம்நீ புதுமைப் பேச்சின் செவிஈர்ப்புத் தானம்உன் செந்தேன் நாக்கு!

துருப்பிடித்த வார்த்தைகளை தூரத் தள்ளி சுறுசுறுப்புச் சொற்களுக்குச் சூடேற் றியவன்!