பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -- o: -

"தாராபாரதி என்பது தங்களின் இயற்பெயரா?

தாராபாரதி என்பது என் எழுதுகோலின் சுட்டுப்

பெயர். தாயின் மடியில் சூட்டிய பெயர் இராதாகிருட்டினன். தமிழின் மடியில் சூட்டிய

பெயர் தாராபாரதி. எனது இயற்பெயரில் முன்பாதியை (ராதா) முன்பின்னாகத் திருப்பிப் போட்டு, என்னுடைய கவிதை ஆசான் பாரதியின் பெயரை இணைத்துக் கொண்டேன்.

முன்னோடிக் கவிஞர்களாக எத்தனையோ கவிஞர்கள் இருக்க, தங்கள் ஆசானாகப் பாரதியை ஏற்றுக் கொண்ட காரணம்?

பாரதி - அந்தத் தலைப்பாகைக் கவிஞனின்தமிழ் படித்துக் கவிஞனானவன் நான். அந்த மகாகவியின் தமிழ்ச்சுவடி எனது அரிச்சுவடி. பாமரக் காதுகளும் தேமதுரத் தமிழோசை பருகச் செய்தவன். அந்தப்புரத்துத் தாதிகளுக்கும் அந்தாதி பாடிக் கொண்டிருந்த புலவர்களைவிட்டு விலகி வந்தவன். கொலுமண்டபத்துக் கவிதைகளைக் குப்பத்துத் திண்ணைகளுக்கும் கொண்டு போனவன்.

அவனது கவிதைகள் அலங்காரச் சொற்களின் ஊர்வலம் அல்ல; அகராதி வார்த்தைகளின் அணிவகுப்பு அல்ல. எளிய பதங்கள்; இனிய தமிழ்நடை மக்கள் மொழியில் மடைதிறந்த கவிப்பெருக்கு; இலக்கிய வரலாற்றில், நீண் இடைவெளிக்குப் பிறகு கவிதையை நிமிர்த்திய நெம்புகோல்.

சுதந்தர வேள்விக்கு விதை நெருப்பு வழங்கிய சூரியன், மூடத்தனங்களைச் சாடிய முற்போக்குவாதி; சாதிக்கொடுமையையும் மதக்