பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சூரியனைக் கூட சொக்கட்டான் ஆடலாம். என்கிற கவிதையில் பெண்ணினத்தின் மென்மையை அல்ல; மேன்மையைச்

சொல்லியிருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் வரிகள்:

"மெல்லினமாம் பெண்கள் மேலினம்தான்; ஆண்களென்னும்

வல்லினத்தை இடையினத்தில் தூக்கி

வளர்ப்பதனால்!”

உடற்கூறு காரணமாக வல்லினம்’ என்று கருதிக் கொண்டிருக்கிற ஆணினம் தன்னை மேலினம் என்று நினைக்கலாம். ஆனால், மேலினம் என்று மிதப்போடு இருக்கிற ஆணினத்தையே தனது இடுப்பில் தூக்கி வளர்ப்பதனால், தாய்மைப் பண்புடைய பெண்ணினம் மேலானது என்று பாராட்டியிருக்கிறேன்.

இதில் 'ஆல்' என்கிற அசை வருவதால், அந்த ஒரு காரணத்தால் மட்டுமே பெண்ணினம் மேலினமாக உயர்த்திப் பேசப்படுவதாய் நினைக்கிறீர்கள்... கவிதை முடியவில்லை; தொடர்கிறது. பெண்ணினம் மேலானது என்பதை அடுத்தடுத்த வரிகளில் காணலாம். எல்லா வரிகளிலும் 'ஆல்' போட்டால்தானா?... அசை சில இடங்களில் இசையும்; சில இடங்களில் விட்டு

'அசையும்.

தலைமுறை தலைமுறையாகப் பெண்களின் மீது திணிக்கப்பட்டிருக்கிற வீட்டுப் பொறுப்புகள், கட்டாயக் கடமையிலிருந்து விடுவிக்கவோ, ஆண்களுக்குரிய பங்கைப் பிரித்துக் கொடுத்துச்

சுமையைக் குறைக்கவோமனம் அற்றவன் அல்லன்