பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மாணவர்களில் சிலர் 8 என்ற எண்ணை எழுதும்போது மேலே ஒரு பூச்சியமும் கீழே ஒரு பூச்சியமும் போட்டு எழுதுவதைப் பார்த்திருக்கிறேன்... அட வெற்று எண் ஒரு வெற்றி எண்ணை உருவாக்குகிறதே! அந்தத் தாக்கம்தான், இந்தக் கவிதையாக்கம்.

மனிதர்களில் கூட வெற்று மனிதன் என்று எவருமில்லை. விழிப்பும் உழைப்பும் இருந்தால் வெற்றிடத்தைக் கூட வெற்றியிடமாக்கிகொள்ள முடியும். தன்னம்பிக்கையும் , ஒற்றுமையும், முயற்சியும் இருந்தால் - எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்தக் கவிதை ஓர் ஊடகம்.

இறை நம்பிக்கை குறித்துப் பாடல்கள் பாடாததற்குக் காரணம் என்ன?

வாழும் தலைமுறைக்கு, நிகழ்கால வாழ்க்கை யில் மூட நம்பிக்கை. வளரும் தலைமுறைக்கு, எதிர்கால வாழ்க்கை யில் அவநம்பிக்கை... இவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுகிற நன்னம் பிக்கை முனையாகப் பேனா முனை இருக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். இலட்சிய வேட்கை கொண்ட படைப்பாளிகள் இன்றைய கால கட்டத்தில் செய்தாகவேண்டிய முதற்பணி இது.

இளைஞர்களுக்கு, என்னால் எதுவும் சாதிக்க

முடியும் என்கிற தன்னம்பிக்கையை, 'என்மொழியால் எல்லாம் முடியும் என்கிற தமிழ் நம்பிக்கையை, 'என் இனத்தால் சாதனைகள்

படைக்க முடியும் என்கிற சமூக நம்பிக்கையை, 'என் தேசம் எந்தத் தேசத்திற்கும் குறைந்ததல்ல' என்கிற தேசிய நம்பிக்கையை உலக மாந்தன் ஒவ்வொருவனும் என்னுடைய உடன்பிறப்பு'