பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னைமொழி கற்பதற்கேன் தயக்கம்? மற்ற அயல்மொழிமேல் உனக்கென்ன மயக்கம்? சீச்சீ என்னஇது வேண்டாத வழக்கம்? இன்னும் எத்தனைநாள் சோற்றுக்கு வணக்கம்? சொல்நீ!

அரசுகட்டில் வீற்றிருக்கும் தமிழ்த்தாய் உந்தன் அரும்புகளின் தொட்டில்களை விரும்பு கின்றாள் முரசுகொட்டித் தேரிழுப்பாய்; அவளோ உந்தன்

முற்றத்தில் விளையாடக் காத்து நிற்பாள்!

மரியாதை உபசரிப்பை விடவும் உந்தன் மழலைகளின் உச்சரிப்பை நேசிக்கின் றாள்! உரியவளை 'உயிர்மெய்யைத் தந்த தாயை உதடுகளில் கொண்டுவர யோசிக் கின்றாய்!

'தாய்மொழியை மட்டும்நீ விரும்பு; மற்ற தனிமொழிகள் பாராதே திரும்பு என்று வாய்மொழிக்கு வரம்புகட்ட மாட்டேன்! வயிற்று

வரவுக்குப் பிறமொழிதான் வழியென் றெண்ணி

தாய்மொழியை நோய்மொழியாய்க் கருதும் உந்தன் தவறான போக்கைத்தான் கண்டிக் கின்றேன்; தாய்மொழியுன் கட்டைவிரல்; அதனைச் சுற்றித் தனிமொழிகள் பிறவிரல்கள் உணர்ந்து கொள்நீ!