பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

業

தாய்க்கருவில் தமிழோசை கேட்டாய்; இன்று

தாய்மொழிக்கே உன்நாக்கால் தாழ்ப்பாள் போட்டாய் காய்மொழியாய்க் கருதுகிறாய்; போக்கை மாற்று கனிமொழியின் இனிமைகளை நெஞ்சில் போற்று

வாய்மொழிகள் வரிசையிலே முதலில் உந்தன் "வாய்க்காலில் தாய்ப்பாலே வரட்டும் தம்பி! தாய்மொழியில் பாய்மரத்தை விரிக்கலாம் வா! தமிழ்ச்சிறகால் வானத்தை அளக்கலாம் வா!