பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரைப்பைகளிலே எழுதுங்கள்:

விதவித மான முன்னேற் றங்கள்

விண்ணைத் தொடுகிற நம்நாட்டில் - பல வெறும்வயி றுகளோ மண்மேட்டில்!

சுதந்தர தினத்தில் காய்ச்சிய கஞ்சி

சுப்பன் வயிற்றுக்குப் போகவில்லை - அது சுவரொட் டிக்கே போதவில்லை!

வறுமை தீர்க்கும் வளர்ச்சிப் பணியில்

வாக்குப் பெட்டியில் சோறுவரும் - தினம் விளம்பரத் தட்டியில் வீடுவரும்!

தருமம் வளர்த்த தாய்த்திரு நாட்டில் தருமச் சோறு ஒருகவளம் - அது தவணை முறையில் வரும் அவலம்!

கூரையின் உச்சியில் ஏறிய கட்சிக்

கொடிமரங் களுக்குப் புத்தாடை - தந்தை கூலியில் வாங்கிய சிற்றாடை!

கூரையின் கீழே சந்ததிகளுக்குக்

கொடியின் நிழலே மேலாடை - தெருக்

குப்பைப் புழுதி மெய்யாடை!