பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கலத் தாலிவரும் - அதன் மஞ்சளில் சாதிநிறம்! தங்கிய தாயின்மடி - அங்கும் தனித்தனி சாதிக்கொடி!

தொட்டிலில் பிரிவினைகள் - நம் தொழுகைக்குப் பலநிறங்கள் பட்டியில் குலச்சிறைகள் பள்ளிப் படிப்பிலும் பலமுகங்கள்!

சன்னதித் தீர்த்தங்களும் - இங்கு சாதியை வளர்க்குமெனில் - அவை புண்ணிய தீர்த்தமல்ல - வெறும் புல்லிய சாக்கடைகள்!

கீழ்த்திசை வெளுக்கவில்லை - சாதிக் கீழ்மையை விலக்கவில்லை வாழ்த்திசை கேட்கவில்லை - கூட்டு வாழ்க்கையை ஏற்கவில்லை!

யாரிங்கு தலையெடுப்பார்? - இனி யாரிந்தக் களையெடுப்பார்? ஊர்மனம் திறப்பதென்று? - நம் உதிரங்கள் கலப்பதெந்நாள்?

சாதிச் சழக்குகளை - பொய்ம்மைச் சாத்திரக் குப்பைகளை வீதியில் தூக்கியெறி - பொது வேள்விக்குத் தேதிகுறி!