பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

© வேல் பழுதா, விழுதில் பழுதா?

உரமும் திறமும் உள்ளவர் இருந்தும் - நம் தரம் உயர்வதற்குத் தடைகள் எங்கே?

இலக்கை முழுதாய் எட்டிட வில்லையே; இலட்சியத் தரத்தைத் தொட்டிட வில்லையே!

வேரில் பழுதா, விழுதில் பழுதா? யாரிடம் பழுதென ஆராய்ந் திடுக!

நடைமுறை களிலா, விதிமுறை களிலா? கடைநிலை வரைக்கும் கண்டறிந் திடுக!

அனைத்துத் தரப்பையும் தொற்றிக் கொண்டு மெத்தனம் வந்து ஒத்திகை நடத்தும்!

ஆர்வம் இருந்தும் அதற்குக் குறுக்கே சோர்வு வந்து சொக்கட்டான் ஆடும்!

சோர்வுகள் நமக்குப் போர்வைகள் அல்ல; வேர்வையும் தொண்டுமே வேட்டி சட்டைகள்!

உள்ளம் எழுச்சி பெறுவதற் காகநாம்

பள்ளி யெழுச்சி பாடுதல் வேண்டும்!