பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லிலாகுமரி

அன்னைத் திருநாட்டில் ஆயிரம் வளமிருந்தும் கன்னியா குமரியின்னும் கன்னியாய் இருப்பதுஏன்?

இமயத்துச் சீதனத்தை ஏந்திவந்த கங்கையன்னை குமரிக்குக் கொண்டுபோய்க் கொடுக்காத காரணத்தால் -

கன்னியா குமரியின்னும், கன்னியாய் வாழும்நிலை! தண்ணி முடிச்சுபோடத் தாய்ச்சீர் கிடைக்கவில்லை!

நேர்க்கோடு போலிங்கு நீர்க்கோடு போட்டால்தான் தீர்க்கமுடியா வறுமைத் தீக்கோடு மறைந்துவிடும்!

தண்டுவடம் போலந்தத் தண்ணி வடம்போட்டு பண்டைய சிறப்போடு பாரதத் தேரிழுப்போம்!