பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

αώωωωτη &qjó?

விண்ணுக்குள் வீடுகட்டும் வித்தை கற்றும் வேரழிக்கும் போர்முறையை நாட லாமா? மண்ணுக்குள் தெய்வத்தின் பிறப்பை யெல்லாம் மண்வெறியால் கொல்லுவதா மனிதப் பண்பு?

வர்க்கமுறை ஆதிக்க வெறியின் போக்கால் வளமான சோலைகளை எரிக்கலாமா? சொர்க்கத்தைப் படைக்கின்ற தோளின் சக்தி சுடுகாட்டுச் சூனியத்தை ஆக்கலாமா!

என்னாடு உன்னாடு எனப்ப குத்து இந்நாடு அந்நாடு எனப்பி ரித்து தன்னாடு தன்மக்கள் என்னும் போக்கைத் தள்ளிவைப்போம் மனக்கதவம் திறந்து வைப்போம்

எல்லைகளா நமக்கிங்கு வேல? அன்பு இதயந்தான் மானுடத்தின் காவல் வேலி! எல்லையெலாம் சமத்துவத்தின் வாயில்; மாந்தர் இதயமெலாம் சத்தியத்தின் கோயில் செய்வோம்!