பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் முற்றும் முழுவதும் சுற்றம்!

நாடு விட்டு நாடு நதிநடந்து போனதென்று நாடு கடத்திய துண்டா நதிகளை எவரேனும்?

வேற்று நாட்டுப் பக்கம் வேலி தாண்டிய தென்று காற்றினை யாரேனும் கைது செய்ததுண்டா?

மேலுரில் பொழிந்துவிட்டு கீழுரில் பெய்யவரும் சூல்மேகத் தைஎல்லைச் சுவர்கள் தடுத்ததுண்டா?

எல்லைப் புறமரங்கள் அண்டைநாட்டு நீர்க்குடித்தால் வில்லங்கம் செய்ததென்று வேர்களையா வெட்டுகிறோம்?

என்திக்கு இதுவென்று எண்ணுவதேன் என்தோழா? என்இலக்கு பொதுவென்று

எழுச்சிகொள், எழுந்துநில்!