பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாத்தியா வை ஓதும் ஒலி பள்ளிவாசலில் 'அல்லாஹ9 அக்பர்...' பரிசுத்த வேதஒலி தேவன்கோயிலில் 'பரமண்டலத்தில் இருக்கும்...' ஒதுகின்ற மந்திரங்கள் ஆலயங்களில் "ஒம், நமச்சிவாயம் வாழ்க... இந்த ஒலிகளெல்லாம் கூடுவது இதய வானிலே!

பொறந்த நாடு பொன்னாடுன்னு புரிஞ்சுக்கோ, நீயும் புரிஞ்சுக்கோ - நாம போற பாதை ஒண்ணு தான்னு தெரிஞ்சுக்கோ நீயும் தெரிஞ்சுக்கோ!

ஈசனுக்கும் ஏசுவுக்கும் தனிவழிபாடு - நம் தேசமென்ற கோயிலுக்குப் பொதுவழிபாடு! தெய்வபக்தி செய்யும்போது தனித்தனியாக - நாங்க தேசம்காக்கச் சேர்ந்து நிற்போம் அணியணியாக!

பொறந்த நாடு பொன்னாடுன்னு புரிஞ்சுக்கோ, நீயும் புரிஞ்சுக்கோ - நாம

போற பாதை ஒண்ணுதான்னு தெரிஞ்சுக்கோ நீயும் தெரிஞ்சுக்கோ!

0 பள்ளிப் பிள்ளைகளுக்கு... 0