பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடு கோடுகள்

ஆதிகுலம் அரிசனத்தைத் தொட்டால் போதும் ஆண்களுக்கும் தீட்டுவரும் இந்த நாட்டில் வேதியிது சிரிப்பல்ல; வயிற்றெ ரிச்சல்! சிகேடு அகலாமல் தினம்பு கைச்சல்!

ஆதிக்க வெறியர்களால் தாழ்த்தப் பட்டோர்

அவலமுறும் கதையின்னும் தொடர லாமா? தேதிக்கா காத்திருப்பார் திருந்து வோர்கள்? நீண்டாமைத் தீயணைப்பு செய்வ தெந்நாள்?

鄒ooo o oo-:: :o-3.--- oo:: --o

வற்றத்தாழ் வில்லாமல் மனிதர் எல்லாம்

இணை கோடாய் வாழுவதை விரும்பா மூடர் வேற்றுமையை விதைத்தார்கள், கோட்டுக்கப்பால * வெளியேற்றித் தீண்டாமல் விலக்கி வைத்தார்! தோற்றத்தால் ஒன்றென்னும் திருக்கு லத்தார் தொடுகோடு இல்லாத தனிவட் டம்தான்! வற்றங்கள் தரஅந்த வட்டத் திற்கு இதயங்கள் தொடுகோடு போட வேண்டும்!