பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கவிதையும் வாழ்க்கையும்


அவன் வேதனையோடுதான் துடைத்துக் கொள்வான். ஒரு வகையாகத் தன் விளையாட்டுக்களை முடித்துக்கொண்டு கீழே இறங்கி, ‘அப்பாடி' என்று ஒரு பெருமூச்சு விடுவான். அம் மூச்சிலேதான் எத்துணை உள்ளச்சோர்வு கலந்திருக்கும்! ஆனல் அதேவேளையில் அங்குள்ளவர் அனைவரும், ஆடல் முடிந்து விட்டதே! என்று மகிழ்ச்சி நீங்குவர். பாவம் கூத்தாடியின் உள்ளச் சோர்வு அவர்களுக்கு எப்படித் தெரியும்? ஆடி ஒய்ந்த அவன், அப்பார்வையாளர் தரும் பணம் காசுகளைச் சேர்த்துக் கொண்டு மூட்டை கட்டுவான். ஆம், கழைக்கூத்தாடியின் ஆடல், கலைகளுள் ஒன்றுதான். எனினும், அவன் கலை மற்றவர்களுக்கு இன்பம் தருகின்றதேதவிர, அவன் வரையில் அது ஒரு வாழ்க்கைப் போராட்ட நிகழ்ச்சியாகத்தானே முடிகின்றது! ஆனால், கவிஞன் காட்டும் கவிதைக் கலை அப்படிப்பட்டதன்று.

ஆடலும் பாடலும் இடையறாது இயங்கும் நாடு நம் அருமைத் தமிழ்நாடு. தண்ணுர் தமிழ் அளிக்கும் இப் பொன்னாட்டில் ஆடற்கலையும் பாடற்கலையும் பன்னெடுங் காலமாக வாழ்ந்து வருகின்றன. ஆடற்கலை சிறந்த ஒன்றாகப்பண்டும் போற்றப்பட்டது; இன்றும் உலக மக்களெல்லாம் ஒருசேரப் போற்றக்கூடிய வகையில் நம் நாட்டுப் பரதமாகிய ஆடற்கலை சிறந்துள்ளது. இக் கலைபற்றியும் இதன் அமைப்பு முதலியன பற்றியும் சிலப்ப்திகாரம் அழகுபட விரிவாக விளக்கியுள்ளது. ஆம். இளங் கன்னிகை ஒருத்தி கலை நலமெல்லாம் தோன்ற ஆடுவதே இக்கலை.

நடன அரங்கில் மக்கள் நிறைந்திருக்கிருர்கள். ஆடவரும் பெண்டிரும், இளைஞரும் அணிஅணியாக நாடக அரங்கில் அமர்ந்துள்ளனர். குறித்த வேளையில் திரை நீக்கப்படுகின்றது. ஒசிந்த பூங்கொம்பென நின்ற கன்னியின் ஆடல் தொடங்குகின்றது. ஆடலில் எத்தனையோ வகை. பெண் தன்னை எத்தனை வகையில் வளைக்க முடியுமோ அத்தனையும் செய்து கலை நலத்தைக் காட்டுகின்றாள். காண்கின்றவர் தம்மை மறந்து கலைவய மாகின்றனர். நாடக அரங்கில் நெடுநேரம்