பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கவிதையும் வாழ்க்கையும்


பற்றிய விமரிசனங்களை எழுதுகின்றார்கள். இப்போது ந்ம் நாட்டிலேயும் ஒரு நூலைக்கொண்டே அதன் ஆசிரியனைப்பற்றி அறிய ஒரளவு முற்படுகின்றனர். அதன்மூலம் அக் கவிஞனை, நல்லவன் என்றோ தீயவன் என்றோ அறிந்து கொள்கின்றோம். எனவேதான் கவி, அவனைப்பற்றி அறியும் நீதிபதியாகின்றது. இது நிற்க.

ஆராய்ச்சியைப்பற்றி எண்ணும்போது நம் தமிழ் நாட்டின் நிலை நமக்குத் தெரியாமல் இல்லை. மேலை நாட்டுக் கவிதைகளைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றன. அவர் நாட்டு உயர்ந்த கவிஞர்களாகிய ஷேக்ஸ்பியரைப் போன்ற பலருடைய கவிதைகள், ஆயிரக்கணக்கானவர்களால் ஆராயப்படுகின்றன. ஆனாலும் நம் நாட்டில் அத்தகைய ஆராய்ச்சி இல்லை. திறன் ஆய்வு' என்ற துறை இன்னும் நேரிய முறையில் தமிழ் நாட்டில் தோன்றவில்லை என்றே சொல்லலாம். திறன் ஆயும் திறம் உடையவர்கள், நாட்டில் இல்லாத குறையன்று, நாட்டில் திறன் ஆய்வு நூல் உண்டாகாமைக்குக் காரணம். ஆனல், தமிழ் நூல்களை ஆராயக்கூடாது என்ற ஒரு மனப்பான்மை நாட்டில் வளர்ந்துவிட்டது. அப்படியும் ஒரு சிலர் ஆராய முற்பட்டரானலும், அவரும் காய்தல் உவத்தல் அகற்றி ஆயும் நெறியினை மேற்கொண்டு செல்லவில்லை என்று கூறும்படி ஆராய்ச்சி நடத்துகின்றனர். மேலைநாட்டு ஆய்வாளர் கவிதையின் கண்ணே தம் கண்ணுகக் கொண்டு, கவிதைகளை ஆராய்ந்து, அவற்றில் உள்ள நலங்கேடுகளை எழுதத் தொடங்கி, உள்ளதை உள்ளவாறு எடுத்துரைக்கின்றனர். அவர் கூறுவது உண்மையில் குற்றமாயின், அந்நூலைத் தலைமேற்கொண்டு போற்றும் உயர்ந்தவர்களுங்கூட அந்த ஆய்வினை மகிழ்ச்சியுடன் வரவேற் பார்கள். ஆய்வாளரும் தாம் முன்னரே வரையறுத்த ஒரு முடிவின்படி, அதை ஆராயத் தொடங்க மாட்டார். ஆனால், இங்குத் தமிழ்நாட்டின் நிலையே வேருய் இருக்கின்றது. நாட்டில் நல்ல இலக்கியங்களுக்குக் குறைவில்லை; சங்ககால இலக்கியங்கள் தொடங்கி, இந்த நூற்ருண்டின் கவிதைகள் வரையில் தமிழ்க்