பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை ஒரு கலை

11


அவர்கள் அமர்ந்திருந்தும் நேரம் செல்வதே அவர்களுக்குத் தெரியவில்லை. தன்னை மயிலாகவும், மற்றும் பாம்பாகவும்: பல்வேறு பொருளாகவும் ஆக்கி அலங்கரித்துக்கொண்டு, அப் பெண் ஆடும் நலமெலாம் கண்ணால் அள்ளிப் பருகி ஆனந்த முறக் காண்போர் கைதட்டி ஆரவாரிப்பர். தலைவர் அக் கலை நலத்தையெல்லாம் பாராட்டிப்பேசுவர். ஆனால், அதேவேளையில் அப்பெண்ணின் நிலை என்ன? தன் புகழ் கேட்டு அவள் உள்ளம் மகிழும்; கை தட்டும் ஆரவாரம் அறிந்து உணர்ச்சி பொங்கும். எனினும், தாங்கமுடியாத நகைப் பளுவையும், சுமக்க இயலாத ஆடை அலங்காரங்களையும் தாங்கியும் சுமந்தும், மயிலாகியும், பாம்பாகியும் அடி பிறழாது நடிக்க வேண்டுமே என்ற கவலையில் நிமிடத்துக்கு நிமிடம் நெளிந்துநிற்கும் நிலையில் அவள் உள்ளம் என்ன பாடு படும் வழியும் வியர்வையையும் துடைக்க முடியாது: கண் கூச்சமிடும் ஒளி விளக்கின் வெளிச்சத்தை விட்டகல முடியாது. நட்டுவனர் பாட்டுக்கும் தாளத்துக்கும் ஒப்ப நின்று ஆடவேண்டிய அந்தக் கொடிய நிலையை எண்ணின், அவள் உள்ளம் வருந்துமே ஏதோ பொழுது போக்குக்கு என்று அக் கலையைக் கற்பவர் ஒரு சிலர் இருப்பினும், பலர் அதை வாழ்க்கைக்கு வருவாய் தேடித்தர என்றுதானே பயில்கின்றனர்? படங்களிலும், அரங்கங்களிலும் மணம் முதலிய நிகழ்ச்சிகளிலும் நடித்து, தம் வாழ்வுக்கு வேண்டிய பொருள்பெறும் நடன மாதர்கள்தாமே நாட்டில் அதிகம் குறைந்தது மூன்று மணிநேரம் ஆடி அலுத்து நிற்கும் அந்நாட்டியப் பெண்ணின் உள்ளமும் உடலும் அந்த வேளையில் எத்துணைச் சோர்வினைப் பெற்றிருக்கும்! கண்ட மக்களெல்லாம் கருத்தழிந்து எல்லையற்ற இன்ப வாரிதியில் திளைக்கும் அந்த வேளையில், அந்த இன்பத்துக்கு மூல காரணமாயிருந்த அந்த மங்கையின் நிலை இவ்வாறாய்ச் சோர்வுற்ற நிலைதானே? ஆம். ஆனல், கவிஞன் காட்டும் கவிதைக் கலையோ, இந்நிலைக்கு மாறுபட்ட ஒன்றுதான். மற்றவர் மகிழத் தானும் மகிழ்வதே கவிஞனின் கலை.

‘முத்துக் குளிப்ப்தொரு தென் கடலிலே’ என்று நம் நாட்டுப் பெருமை தோன்றப் பாட்டிசைக்கின்ருர் கவிஞர்