பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

113


சீற்றத்தால் பொங்குகிறது. அந்த வெகுளி உள்ளுத்தின்வழி உதட்டில் சொற்கள் உருவாகின்றன.கண்ணகி அச்சொற்களை எவ்வாறு உதிர்த்தாளோ, நாமறியோம்! . ஆனல் இளிங்கோவடிகள் அவள் கூற்றை. இவ் வல்லின எழுத்தின் துணைகொண்டு அழகாக அவளது.உள்ளும் புறமும் ஒருசேரப் பயில்வார்க்குப் புலனாகும்படி தம் கவிதையில் வடித்துள்ளார்.

‘மட்டார் குழலார் பிற்ந்த பதிப்பிறந்தேன்;
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாயின்,
ஒட்டேன் அரசோடு, ஒழிப்பேன் மதுரையை!’

என வஞ்சினம் கூறியதாகக் காட்டுகின்றார். இவ்வடிகளுள் வல்லெழுத்து மிக்கிருத்தலே அவள் கோபக்குறியைப் புலப்படுத்தக் காரணமாயின் என்பர், இதைப் போன்றே இராமாயணத்தில் பல இடங்களிலும், வேறு பல காவியங்களிலும், சிற்றத்தைக் காட்ட வல்லின,எழுத்துக்கள், பெரிதும் பயன்பட்டன என்பதை அறிஞர் எடுத்துக் காட்டுவர்.

மெல்லின எழுத்துக்களின் அமைப்பையும் அசைவையும் அவற்றின் வழிக்காட்டும் மெல்லியற் பொருள்களையும் பல பாடல்கள் மூலம் விளக்குவர் ஆய்வாளர்:

‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்ச்நிமிர் சீறடிய ளாகி'
அஞ்சொலிள மஞ்ஞையென் அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சம்கள் வந்தாள்.’

என்பதும் அவற்றுள் ஒன்று. இது கம்பர் கைத்திறன். மங்கை ஒருத்தி கொம்பின் ஒசிந்து மெல்ல வரும் காட்சியைக் காட்டும் பாடல் இது, இதில் மெல்லெழுத்துக்கள்.மிக அதிகமாய் விரவி, அம்மங்கையின் செயலை நமக்குக் காட்டுகின்றன அல்லவா?

அமைதியான இன்ப வாழ்வைக் குறிக்கும் பகுதிகளுக்கு இடை எழுத்துக்கள் பெரிதும் துணையாய் அமைவன போலும்! அதற்குச் சிலப்பதிகாரத்திலே கோவலன் கண்ணகியோடு புகாரில் சிலகாலம் அமைதியாய் வாழ்ந்த நிலையினைக் காட்டும் கவிதையிலே இளங்கோவடிகள்,