பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கவிதையும் வாழ்க்கையும்


எழுத்துக்களைக் கொண்டு பல வகையான பொருள்களை விளக்குவதே சூத்திரம், என்கிறார். மேலும், அது திட்பமாக நின்று, நுட்பமான பொருளையும் விளக்கும் திறன் வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பது அவர் கூற்று. அவர் இச் சூத்திரத்திர்த்திற்குக் காட்டும் உவமை சாலச் சிறந்தது. செம்மையான கண்ணாடியை இச் செம்மையான கவிதை நல்ன் நிறைந்த சூத்திர்த்துக்கு உவமையாக்க் காட்டுகின்றார். அழகிய கண்ணாடி தன்னிடத்தே கொண்ட பொருளை எவ்வாறு திட்டமாகவும் திறம்படவும் விளக்கிக் காட்டுகிறதோ, அவ்வா றமைவதே சூத்திரம் என்பது அவர் காட்டும் சிறப்பு.

இயங்கும் படக்காட்சியைக் காணாத மக்கள் இன்றைய உலகில் இருக்க மாட்டர்ர்கள். பார்க்குமிடமெங்கும் படக் காட்சிக் கொட்டகைகள் பரந்து நிறைந்துள்ளன. எத்தனையோ படங்கள் புற்றீசல்களெனத் தோன்றி மறைகின்றன. அப் படக்காட்சிகளில் காண்பதுதான் என்ன? வெள்ளித் திரையில் வெற்று நிழல்களே விழுகின்றன. ஆனால், நிழல்களின் உருவங்களை நேரில் காண்பது போன்று அத்துணைத் தெளிவாகவும் பெரிவையாகவும் காட்டுவது எது? படச்சுருளோ, மிகச் சிறியது; கைப்பிடியில் அடங்கக் கூடியது. ஆனால், அதே படந்தான் வெள்ளித் திரையில் அவ்வளவு பெரிதாகத் தெள்ளத் தெளிய விளங்குகின்றது. அசைகின்றது: ஆடுகின்றது. பாடுகின்றது. சாதாரண மனிதன் போலவே அனைத்தும் செய்கின்றது. அவற்றையெல்லாம் அச்சிறு படச் சுருளிலிருந்து நமக்கு உருவாக்கித் தருவது இடையிலுள்ள இறு கண்ணுடிதானே? அந்தத் கண்ணுடி (lens) எத்துணைச் சிறிய, பொருளையும் பெருக்கிக், காட்டுகின்றது . என்பதை அறியாதார் யார்? இப்போது பவணந்தியின் உவமையைப் பொருந்திப் பாருங்கள். எவ்வளவு பொருத்தமாக அமைகின்றது அது! எங்கோ பாமரர் கண்ணுக்குத் தெரியாத பட்ச்சுருளில் உள்ள அனைத்தையும், வெள்ளித் திரையில் அத்துணைத் தெளிவாகத் திட்ப நுட்பமாகத் தெரியும் வகையில் எடுத்துக் காட்டுவது அக் கண்ணாடி. அதைப்போன்று, நல்ல