பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கவிதையும் வாழ்க்கையும்


என்றால், ‘புலி போலப் பாய்தல்? கண்டதன்றே! ஆயினும், புலி போலப் பாய்ந்தான்!’ என்றால், விரைந்து பாய்ந்தான் என்பதை அனைவரும் - புலியைக் காணாதவருங்கூட-நன்கு அறிந்து கொள்வர் அன்றோ! ஆகவே, உவுமை காணாததைக் காட்ட மட்டும் வருவதன்று.

கவிஞன் உள்ளத்தில் எத்தனையோ வகையான உணர்ச்சி அலைகள் தொடர்ந்து உருப்பெற்றுக் கொண்டேதான் இருக்கும். இவை இன்ன வகையானவை என்று அறுதியிட முடியாதன. அவ்வுணர்வின் வழிப் பலப்பல பொருள்கள் உருப்பெற்றுக்கொண்டே வரும். அவ்வாறு உருப்பெற்ற பொருளாகிய கவிதைகள் சிறக்கும் வழிக்கு, இந்த உவமை துணை செய்வதாகும் என்பது அறிஞர் முடிவு. அவர்தம் முடிவின் வழி, கவிதை எப்படி, எண்ணி எண்ணித்தான் பாட வேண்டும் என்ற நியதியில்லாது வெள்ளம்போலப் புறப்பட்டு வருகின்றதோ அப்படியே உவமையும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு கவிஞன் உள்ளத்திலே உதித்தோடும் பேராறு போன்றதென்பதை அறிதல் வேண்டும்.

இத்தகைய உவமை பல பாடல்களாலேதான் ஆக்கப்பட் வேண்டும் என்ற நியதி இல்லை. ஒரு சொல்லிலேயும் உவமை காணலாம், ஒரு தொடரிலேயும் உவமை காணலாம்; ஒரு பாட்டிலேயும் உவமை காணலாம். கவிதைக்குச் சொன்ன அத்தனையும் உவமைக்கும் பொருந்தும். ஒரு பொருளை முற்றிய கவிஞன் பாராட்டும் முறை மற்றவர்களுடையதை நோக்க எவ்வாறு மாறுபட்டிருக்குமோ; அவ்வாறே ஓர் உவமை மற்றவர்தம் கற்பனையைக் காட்டிலும் முற்றிய கவிஞன் வழிச் சிறப்புடையதாய் விளங்கும். பயனற்ற பொருள்கள்கூடப் புலவர் நாவில் பொதுளும் கவிதைகளால் பெருமை அடைவது போன்று ஒன்று மற்றவைகூட, கவிஞர்தம் உவமை நலத்தால் உயர்வுறும். தீய பொருள்களுங்கூட உவமை நலத்தால் உயர்த்தப் பெறும். அம்மட்டோ சாதாரணப் பொருள்கள் கூட உவமை வழி உயர்ந்த மனிதனுக்குப் பல உண்மைகளை உயர்த்தும். கவிஞர் உவமை வழி உயர்வைத் தாழ்வாக்குவர்