பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

129


என்னும்போது உவமிக்கப்படும் பழம் இழிந்து வரல் வேண்டும் என்ற நியதியில்லை. அது இயவ்யாகவே நல்ல உயர்ந்த பழந்தான்: இந்த உவமையால் அப் பழம் இன்னும் சிறக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும். பின்பு ஏன் தொல்காப்பியர் ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை’ என்றார்?

ஒரு பொருளைப்பற்றிப் பாட விரும்பும் கவிஞன் அதன் உயர்வுகளைப்பற்றித்தானே பேசவேண்டும்? அதை ஒத்து நோக்கிக் கருதும்போதும் உயர்ந்த வகையில்தானே. அவ்வுவமையையும் பொருத்த வேண்டும்? உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என வள்ளுவர் கூறியது அது கருதியன்றோ? இந்த நிலையில் தான் எடுத்துக்கொண்ட பொருளை மேலும் மேலும் சிறக்கப் பாடுபவனே உண்மைக் கவிஞனாக முடியும். தனக்குவேண்டாத பொருளாயினும், அதிைப்பற்றிக் கவிஞன் பாடுவாயின், அதை உயர்த்தித்தான் பாடவேண்டும். அன்றித் தாழ்த்தியோ பழித்தோ பாடுவானாயின், அவனும் அவன் கவிதையும் மக்களால் பெரிதும் விரும்பப்படா நிலை தோன்றும். நாம் மேலே காளமேகப் புலவர் மற்றவரைப் பழித்துப் பாடிய காரணமேதான் அவரும், அவர் கவிதைகளும் இன்று சமுதாயத்தில் பேற்றப்படாத நிலையை உண்டாக்கி விட்டது என்பதைக் கண்டோம். ‘பகைவனுக் கருள்வாய்’ என்ற பண்பட்ட உள்ளந்தானே கவிதையுள்ளம்? பிறர் குறை காண்டலிற் குருடனாகி, பிறர் குறைபேசலில் ஊமனாகி வாழ வேண்டுமென்றுதானே இன்றைய கவிஞர்கள்கூட விரும்புகின்றார்கள்? எனவே, மற்றவர்களிடத்தோ, மற்றைய பொருளிடத்தோ உள்ள குற்றங்குறைகளை நீக்கிக் குணத்தைப் புகழ வேண்டுவதே கவிஞன் பண்பு. அந்த நிலையில் கவிஞன், தான் உவமிக்க எடுத்துக்கொண்ட பொருளை இழிவுபடுத்த மாட்டான். அவ்வாறு படுத்தவேண்டும் என்பது தொல்காப்பியருக்கோ, பேராசிரியருக்கோ கருத்தன்று. எனினும், உரையாசிரியர் உரையால் ஒரு சிலர் அவ்வாறு பொருள் கொள்ளுகின்றார்கள் என்பதை அறியவே இத்துணை எழுத நேர்ந்தது. அவர் தம் கருத்துதான் என்ன? எடுத்து விளக்க