பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

கவிதையும் வாழ்க்கையும்



வேண்டிய பொருள் எப்படிப்பட்டதாயினும், அதனினும் மேம்பட்ட ஒன்றைக் காட்டி விளக்கினால், அது 'பொன்மலர் நாற்ற முடைத்து என்பதுபோலப் பின்னும் சிறக்கும் என்பதுதான். உவமை, ஆளும் கவிஞர்களுக்கு ஒரு வழிகாட்டி போன்று, அதற்கு முன் வாழ்ந்த மெய்ப் புலவர்கள் கையாண்ட ஒரு பண்பு கலந்த பாட்டு நடையை நமக்கு அறிவிப்பதாக அமைந்து நிற்பது என்பதே இதன் பொருள். எவ்வளவு உயர்ந்ததாயினும், அதற்கு உவமை காணும்போது, அதனினும் உயர்ந்த ஒன்றையே காட்டி, அதன்வழி அப்பொருள் நலத்தை மேலும் 'சிறக்க வைக்க வேண்டுவதே கவிஞன் கடனாகும். அதுவே கவிதையின் நலமுமாம்.

இனி, இவ்வுவமை நலத்தை ஆசிரியர் தொல்கர்ப்பியனார் எவ்வெவ்வாறு விளக்குகின்றார் என அறிதலும் அமைவுடைத்தாகும். ஒன்றுக்கொன்றை ஒப்புப்படுத்துவதுதான் உவமையென அறிந்தபின், எந்தெந்த வகையில் அவ்வொப்புமை அமையவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் முதலில் விளக்கிய பின்பே மேலே செல்கின்றார்.

'வின் பயன்மெய் உரு என்ற நான்கே -
வ்கைபெற வந்த உவமத் தோற்றம்'

என்பது உவம இயலின் முதற் சூத்திரமாகும். தொழிலும், பயனும், வடிவும், வண்ணமும் என்னும் நான்கு வகைப்பட் வருவ்தே உவமம் என்பது அவர் கருத்து. இவ்வாறு நான்கையும் முறைப்படுத்திக் கூறுவதற்கெல்லாம். பேராசிரியர் காரணங்களை நன்கு ஆராய்ந்து கூறுகின்றார். தொழிலால் உவமிக்கப்படுவது வினை அல்லது தொழில் உவமமாம். 'புலி பாயுமாறே பாயும் மறவன்', என்னும் உவமை அதற்கு உதாரணமாகும். புலி பாய்தலாகிய தொழில் மறவன் தொழிலுக்கு உவமிக்கப்படுகின்றது. 'மாரியன்ன வண் கை' என்னும்போது 'மாரி போல, வேண்டாதவராயினும் கொடை நலம் ஆற்றும் கை' எனப் பொருள் தந்து அது பயன் உவமமாகின்றது. இதில் தொழில் முதலிய எதனாலும் உவமை பெறமுடியாது. மழை