பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கவிதையும் வாழ்க்கையும்



என்று தொல்காப்பியனாரே கூறுகின்றார். இக் கூற்று நாம் மேற்கண்ட ஒப்புநிலையின் தன்மைக்குச் சிறந்த ஆதாரமாகும்.

தொல்காப்பிய உவம இயலை விடுத்து, இலக்கியத்தில் வழங்கப்பெறும் உவமங்களிற் சில காணலாம். ஆனால் அதற்கும் தொல்காப்பியத்தைத் தொட்டே நாம் சொல்ல வேண்டியுள்ளது. உவமத்தை ஆசிரியர் தொல்காப்பியனார் உள்ளுறை உவமம், வெளிப்படை உவமம் என 'இரண்டாகப் பிரிக்கின்றார்; அதை உவம இயலுள் கூறாது அகத்திணை இயலுள், உள்ளுறை உவமம் மிகச் சிறந்து நிற்கும் அகப்பொருள்பற்றிய கூற்றுக்கள் நிகழும் இடத்தில் குறிக்கின்றார். வெளிப்படை உவமம் என்பது யாவருக்கும் எளிதில் விளங்குமாறு உவம உருபுடனோ, அது இன்றியோ கூறுவது. ஆனால் உள்ளுறை உவமம் அத்தகையதன்று. -

கவிஞன் பலவற்றைப்பற்றிப் பாட்டிசைக்கின்றவன்; சிலவற்றைப்பற்றி வெளிப்படையாகப் பாடுவான்; சிலவற்றைப் பற்றிக் குறிப்பாகவே கூறவேண்டியிருக்கும்; அதுவும் உள்ளத்திலேயே உற்றுணரும் அக வாழ்வில் பலவிடங்களில் பாங்கன், பாங்கி, தோழி, தலைவி முதலியவர் வாயிலாகக் கவிஞன் பலவற்றை வெளிப்படையாகக் கூறாது மறைத்துக் கூறவேண்டியிருக்கும். கூற வேண்டியவற்றைக் கூறாது விடுதலும் இயலாது; கூறவும் வேண்டும். அறியவேண்டுபவர் தவிர, மற்றவருக்கு அதன் பொருளும் புலப்படலாகாது. இத்தகைய இக்கட்டான நிலையில் என்ன செய்வது? இதற்குத் தான் கவிஞன் இந்த உள்ளுறை உவமத்தைக் கையாண்டான். இதில் சொல்லவேண்டிய பொருளுக்கு ஏற்ற உவ்மையை மட்டும்வேறு செயலாக விளக்கி, அதன் மூலம் தான் கூற வேண்டியதைக் கவிஞன் விளக்கும் திறன் அறிந்து இன்புறத் தக்க தொன்றாகும். இவ்வாறு பொருள் புறத்ததாக நின்று காட்டும் மற்றொரு வகை விளக்கத்துக்கு இறைச்சிப் பொருள் என்பதுபெயர். இதனைத் தொல்காப்பியனார் பொருளியலிற் கூறுகின்ருர். அங்கும் இது அகப்பொருள்பற்றியே வருகின்றது. ஆஞல், இதனை உள்ளுறை உவமத்திடையிருந்து வேறு