பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை ஒரு கலை

15


கெட்டொழியுமேயன்றி, அவை என்றென்றும் வாழா. ஒரு சில கவிதைகள் தோன்றிய நாள் இன்னதென் அறியா நெடுங் காலத்துக்குமுன் உண்டான போதிலும், இன்றும் வாழ்வதற்கும், ஒருசில தோன்றிச் சில நாள்களுக்குள்ளே கேட்பாரற்று வீழ்வதற்கும் காரணம் இதுவேயாகும்.

கவிஞன் எப்போது பாட்டிசைக்கின்ருன்? கழைக் கூத்தாடி தனது அன்றைய வருவாயை எண்ணும்போது ஆடுகின்றான். முத்துக் குளிப்பவன் காலம் பார்த்து, இடம் பார்த்து, பிற சுற்றுச் சார்புகளெல்லாம் பார்த்துத் தன் தொழிலைத் தொடங்குகின்றன். சர்க்கஸ்காரன் அந்த ஆட்டவேளையின் கடைசிக் கட்டத்தில், முள் வேலிகளுக்கு இடையில் தனக்குக் காவலாகப் பலர் சூழ்ந்து நிற்க, தன் கலை நலத்தைக் காட்ட முற்படுகின்ருன். ஆடரங்குள் அழகணங்கின் நிலையும் அத்தகையதே. அவர் யாவரும் தம் எதிரில் நிற்கும் மக்கள் மன நிலையை ஒட்டி நீட்டியும் குறுக்கியும் தம் கலை நலத்தைக் காட்டுவர். ஆனால், கவிஞன் அந்த நிலையில் பாட்டிசைக்க முடியாது. முதலாவதாக மற்றவரை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒன்றுக்காக மட்டும் அவன் கவிதை ஊற்றும் புறப்படாது. ஆம். கவிதை மற்றவர்களை மகிழ்விப்பதுதான். ஆனால், மற்றவரைத் தன் கவிதையால் மகிழ்வித்து அதனல் பொருள் பெறவேண்டும் என்ற உணர்வுவழிக் கவிதை கட்டாயம் உருப்பெற்று உதட்டில் ஓடி வராது.

கவி எப்படிப்பட்டவன் என்பதைத் தமிழர் மட்டுமன்றி மற்றவர்களும் வரையறுத்துள்ளார்கள். மற்றவர் தன்னைப் புகழவேண்டுமே என்பதற்காகமட்டும், ஒருவன் உண்மைக் கவிஞனாக முடியாது. மற்றவர்களிடம் பொருள் பெற வேண்டுமே என்பதற்காக மட்டும் கவிஞன் கவிபாட முடியாது. ஏதாவது கட்டாயத்தின்பேரில், யாருக்காவது பாடித்தர வேண்டுமே என்பதற்காக மட்டும், கவிஞன் தன் கடையை விரிக்க முடியாது. ஒரு வேளை ஒரு சிலர் விரித்திருக்கலாம். ஆனல், அவர்கள் கவிஞர் வரிசையில் சேர்க்கப்படாராய், அவர்தம் கவிதைகளும் கவிதையென எண்ணப் படாதன