பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

153



சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கண்டு காட்டியிருக்கின்றார்கள். எப்படிக் கண்டார்கள் என்பதைத் திட்டமாக அறிய இயலாவிட்டாலும், அவர்கள் கண்ட அத்தனை முடிவுகளும் இன்று உண்மையென விஞ்ஞான வழியில் விளக்கப்படு வதைக் காண, அவர்தம் ஆய்வுத் திறன் ஓரளவு விளங்குகிற தன்றோ! இவ்வாறு, நாம் நமது வாழ்வை ஆராய்வதன் முன் இந்த வாழ்வு வாழ நிலைக்களனாய் இருக்கும் உலகைப்பற்றியும் இவ்வுலக முதற்காரணம் பற்றியும் அறிய வேண்டுவது அவசியம். பின்பு இந்நிலவுலகம் தோன்றி இன்றுவரையும் மனிதன் எவ்வாறு படிப்படியாய் வளர்ந்துள்ளான் என்பதையும் காணல் வேண்டும். இத்துறையில் இன்று நம் நாட்டவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்பது உண்மைதான். எனினும், மேலை நாட்டு அறிஞர்கள் எல்லாத் துறைகளிலும் கருத்திருத்துவது போன்று, இத்துறையிலும் கருத்திருத்தி ஆராய்ந்து வருகின்றார்கள். நிலம் பற்றியும், அதில் தோன்றும் உயிரினங்கள் பற்றியும், அவற்றின் வளர்ச்சி பற்றியும் பலப்பல நூல்களை எழுதிக்கொண்டே யிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் பெருமுயற்சியால் அறிந்து காட்டுகின்ற முடிவுகள் அனைத்தையும் நம் இலக்கியங்கள் எடுத்துக்காட்ட இயலாவிட்டாலும், அவர்கள் கூறுவனவற்றுள் சில, பழங் காலத்திலே நம் தமிழ் இலக்கியங்களிலும் கூறப்பட்டிருப்பதை அறிய நாம் மகிழாதிருக்க முடியுங்கொல்! உலகத் தோற்றத்தையும் உயிர் வளர்ச்சியையும் பற்றி அவர்கள் கூறுமாற்றைக் கண்டு. மேலே வாழ்க்கை முறையைக் காணலாம்.

உலகத் தோற்றத்தையும் அதன் வரலாற்றையும் கூறுகின்ற நூல்கள் நம்மிடை இன்று ஏராளமாய் உள்ளன. வரலாறு என்னும்போது நம் மனக்கண்முன் வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த சரித்திர நூல்கள் தெரியும். வரலாறு என்றால், ஒரு நாட்டின் அரசரைப் பற்றியும், அவர் தம் குடும்பம் பற்றியும், அவர்தம் வாழ்க்கையைப் பற்றியும் குறித்து எழுதுவதுதான் எனப் பலர் நம்பி அவ்வாறே எழுதியும் வைத்துள்ளார்கள். ஆனால், உண்மையில் வரலாறுக.வா.--10