பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

155


அமைப்பும், அதிலே நிலைத்து நிற்கும் சூரியன் தன்மையும் அதைச் சுற்றி வட்டமிடும் உலகம் போன்ற கோளங்களின் நிலையும் அமைப்பும், அவை எவ்வெவ்வாறு வளர்ந்து இன்றைய நிலையில் இருக்கின்றன என்பதன் ஆய்வும், அவற்றில் உயிர்த் தோற்றம் உண்டான வழியும், அவ்வுயிர்த் தோற்றத்தின் வாழ்க்கை முறையும் வளர்ச்சியும் ஆகியவற்றை உள்ளடக்கியதே உண்மை வரலாறு ஆகமுடியும். இந்த உண்மையை இன்றைய உலகத்தார் உணர்ந்துள்ளனர் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. அவர்வழி அண்டகோள வரலாறு. தொடங்கி, தனி மனிதன் வரலாறு முடிய அமையும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளிவரும் என்ற நம்பிக்கை தழைக்கின்றது. அந்த வழியில் இன்று மேலைநாட்டில் பல ஆய்வாளர் தம் கருத்தைச் செலுத்தி, நூல்களை வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றனர். நம் தமிழ் நாட்டிலும் இத்தகைய வரலாற்றுக் கருத்துக்கள் பழங்காலக் கவிதைகளில் காணப் பெறுகின்றன. அவற்றின் வழி ஒருவாறு நாம் வாழும் உலகம் பற்றி உணர்ந்து கொள்ள வழி உண்டு.

இன்று நாம் வாழும் உலகத்தின் பரப்பை அளந்து கணக்கிட்டிருக்கிறார்கள்; இவ்வுலகம் இரண்டாயிரத்து ஐந்நூறு (2500) கல் சுற்றளவுடையது என்று கூறுவர். இது சுழன்று கொண்டேயிருக்கின்றது; சூரியனையும் சுற்றிவருகின்றது. அவ்வாறு தன்னிற் சுழல்வது ஒரு நாள். சூரியனைச் சுற்றுவது ஓர் ஆண்டு என்றெல்லாம் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த உலகத்தைச் சுற்றிச் சந்திரன் வட்டமிடுகிறான் என்றும், அவ்வாறு ஒருமுறை வட்டமிட ஆகும் நாள்களே திங்களாக எண்ணப்படுகின்றனவென்றும் கூறுவார்கள். இவ்வாறே சூரியனையும் பூமியையும் பலப்பல பொருள்கள் வட்டமிடுகின்றன என்பார்கள். அவை அனைத்தும் உருண்டைகளே என்பதும் அவர்தம் ஆராய்ச்சியின் முடிவு. உலகம் உருண்டை, சூரியன் உருண்டை, வான வெளியில் காணப்படும் அனைத்துமே உருண்டை வடிவிலே உள்ளன என்பதைத் தம் ஆய்வுக் களத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார்கள் அறிஞர்கள்