பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

கவிதையும் வாழ்க்கையும்



நீரைப் பற்றிய ஆராய்ச்சி அனைவரும் அறிந்த ஒன்று: சாதாரண உயர் நிலைப்பள்ளி மாணவனுங்கூட அதன் உண்மையை அறிவான். ஒரு ப்ாத்திரத்தில் உள்ள நீர் இருவேறு ஆவிகளாக-காற்றேடு கலந்தனவாக-பிரிக்கப்படும் ஒரு காட்சி பள்ளிக்கூட ஆய்வுக்களங்களின் அன்றாடக் காட்சியேயாகும். கண்ணுக்குப் புலனாகிப் பெருகி ஓடும் அந்த நீரைப் பிரித்துக் காற்றாக்கி அதன் தோற்றம் இல்லையாகச் செய்ய முடியும். பிராணவாயுவும் நீர் வாயுவும் கலந்த ஒன்றே நீர் என்பதை வெகு எளிதாக எல்லாரும் உணரும்படி செய்துவிட்டார்கள் விஞ்ஞானிகள். என்வே, காற்றிலிருந்து நீர் பிறந்தது என்ற உண்மை புலனாகின்றது. காற்றில் விண்ணாகிய ஆகாயமும் கலந்துள்ளது. விண் என்பது ஒன்றுமற்ற வெட்டவெளி என்பர். மேலை நாட்டு ஆய்வாளர், அவ்வெட்டவெளியாகிய விண்ணைச் சூனியம் ('Vacuum') ன்ன்பர். 'ஒன்றுமற்ற வெட்டவெளியால் பயன் உண்டோ?' என்று கேட்கலாம். ஆய்ந்து பார்ப்பின், அவ் வெட்ட வெளியிலேதான் எல்லாத் தோற்றங்களும் அட்ங்குகின்றன என்பது தேற்றம்.

ஏன்? அவ் வெட்டவெளியால் உண்டாகும் பயன்தான் அளவிடப்போமா! ஒன்றுமில்லாதது எவ்வெவ்வாறு உதவுகின்றது. உண்ணும் பானத்தைச் சூடாகவோ அன்றித் தண்மையாகவோ வைத்திருக்கும் 'தெர்மாஸ் பிளாஸ்க்' இவ்வெட்ட வெளியின் ஆக்கந்தானே? அது மட்டுமோ! ஓடுகின்ற பெரும் புகை வண்டியையும் உடனடியாக நிறுத்துவது இந்த வெட்ட வெளியின் கூட்டுச் சேர்க்கைதானே? (Vacuum Brake). பாரமானியின் பாதரசத்துக்கு மேல் நின்று அதன் பணியைச் செய்ய உதவுவது அவ்வெட்ட வெளிதானே? இப்படி இன்னும் எத்தனையோ வகையில் அவ்வெட்டவெளி உதவுவதை அறியாதார் யார்!

இன்றைய விஞ்ஞானம் இன்னும் அந்த வெட்டவெளியின் செயல் அளவு முதலியவற்றைப் பற்றிய தன் ஆய்வைத்


1. Oxygen and Hydrogen