பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

கவிதையும் வாழ்க்கையும்




இதுவரை கூறியவற்றால், உலகில் பிறந்த அனைத்தும் வாழ நினைக்கின்றன என்பதும், மனிதன் அறிவறிந்து தன் ஆராய்ச்சியின்மூலம் தன் வாழ்வின் மூலத்தையும் அதன்வழி உலகத் தோற்றத்தையும் காண விழைகின்றான் என்பதும், அவற்றைக் காட்டும் முறையில் வரலாற்று ஆசிரியர்கள் சிறிது வழுக்கிவிட்டார்கள் என்பதும், இன்றைய உலகம் எவ்வாறு உண்டாயிற்று என்பதும், இவ்வுலகம் எதனால் ஆக்கப்பட்ட தென்பதும், அவ்வாறு ஆக்க உதவிய பஞ்சபூதங்கள் எவை எவை என்பதும், அவையெல்லாம் அண்ட கோளமாகிய பெரும் பரப்பில் எவ்வெவ்வாறு அமைந்துள்ளன என்பதும், அவை ஒன்றை ஒன்று எவ்வெவ்வாறு பற்றிச் செல்கின்றன என்பதும், உருண்டை வடிவான உலகங்கள் வானவெளியில் எவ்வாறு ஒன்றை ஒன்று பற்றி வட்டமிடுகின்றன என்பதும், பஞ்ச பூதங்கள் பண்டுதொட்டு இன்றுவரை எவ்வெவ்வாறு, பற்றி வருகின்றன என்பதும், இவற்றையெல்லாம் இன்றைய விஞ்ஞானமும், பழங்காலத் தமிழ்க் கவிதைகளும் எவ்வெவ்வாறு பொருந்தும் முறையில் காட்டுகின்றன என்பதும் நன்கு விளங்குகின்றன. மேலே, இவ்வுலகில் உயிர்கள் எவ்வெவ்வாறு தோன்றி வளர்ந்து, இன்றைய நிலையை எய்தின என்பதைக் காண்போம்.