பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

185


 சேர்ந்த கிளை பிறப்பு முதலியன பற்றியும் பேராசிரியர் ஒவ்வொரு சூத்திரத்தும் விளக்கிக் காட்டிக் கொண்டே செல்லல், அறிந்து இன்புறற்பாலதாகும். அவர் மக்களைப் பற்றிக்கூறும் ஒன்று இங்கு நோக்கற்பாலது.

விலங்குகளோடு மாக்கள் என்ற ஒரு பிரிவை ஐயறிவுடைய உயிராகக் குறிக்கின்றார். எனவே, மனிதரிலும் ஐயறிவுடையவர் உள்ளனர் என்பது நன்கு தெரிகின்றது. மாக்கள், எனப்படுவார் மன உணர்ச்சி இல்லாதவர் என்பர் உரையாசிரியர். பின்பு மக்கள் என்ற பகுப்பில், பிறவும் என்ற. தொகுதியில், பிறப்பால் ஒன்று சேர்க்கப்படுவனவற்றுள், 'குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும்.மன உணர்வுடையன உளவாயின், அவையும் ஈண்டு.ஆறறிவுயிராய். அடங்கும். என்பது,' என்று காட்டுகின்றார் உரையாசிரியர். எனவே, இவற்றின் வழி,வெறுந் தோற்றத்தால், மட்டுமன்றி. , மன உணர்வாலேயே, கடைசி அறிவாகக் கூறிய ஆற்றிவுடைமையை உற்று நோக்க வேண்டுமென்பது பெறப்படும். இக்கருத்தை எண்ணித்தான் போலும் ஆசிரியர், திருவள்ளுவுனாரும், -

'விலங்கொடு,மக்கள் அனயர் இங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்'

என்று கற்றவரை மக்களாகவும், மற்றவரை விலங்காகவும் பிரித்துள்ளார். எனவே, தோற்றத்தால் மட்டும் மனிதனாக; வாழ முடியாது என்பதும், மன, உணர்வாகிய உள்ளுணர்வும், பொருந்தியதே ஆறறிவுடைய மக்க்ட்கு அழகாகும் என்பதும், தேற்றம். அப்ப்டியே விலங்கினத்தில் குரங்கு மனித்த்தன்மையைப் பெறக்கூடும் என ஆசிரியர் காட்டுகின்றார். தோற்றத்தால் மனிதத் தன்மையில் மாறுபட்டிருப்பினும், உற்று அறிதலானும், உணர்வானும் மனன் உணர்வு,பெற்ற அந்த விலங்காகிய குரங்கும் மனித இனத்தில் அடங்கும் என்பதை 'அன்றே உரையாசிரியர் காட்டியுள்ளார்: இன்று நம்நாட்டில் குரங்குகளைக் கொண்டு மனிதனிலும்,மேலாகச் செயலாற்றும் திறங்


க.வா—12