பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை ஒரு கலை

19


சிதைந்த சில சூத்திரங்களே நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று,

‘இலக்கிய மின்றேல் இலக்கண மின்றே:
எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே
எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல
இலக்கி யத்தினின்று எடுபடும் இலக்கணம்.’

என்பதாகும். இதில் ஆசிரியர் அகத்தியனர் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பினை விளக்குகின்றார், "இலக்கணம் முன்னா இலக்கியம் முன்னா? என்றால், இலக்கியந் தான் முன்னது என்பது தெளிவு என்பதைக் காட்டுகின்றர். உண்மைதானே ஒரு சித்திரம் முன் இருந்தால்தானே, அதைப் பார்த்த ஒருவன் சித்திரம் இப்படி இப்படி இருந்தது என்று எடுத்துக்காட்ட முடியும் சித்திரமே இல்லையானல், எப்படி அதுபற்றி விளக்கமுடியும்? அப்படி ஒன்றைப்பற்றி விளக்க முற்படின், அது காணாத ஒன்றைப்பற்றிய கற்பனையாகுமே ஒழிய, எப்படி ஒன்றன் இலக்கணமாக அமைய முடியும்? கவிதைக்கும் அது பொருந்துவ தன்றோ! கவிதை ஒன்று இருந்தால்தானே அது இன்னின்ன வகையில் அமைந்திருந்தது 'என்று எடுத்துக் கூறமுடியும்? இலக்கியம் ஒன்று இருந்தால் தானே அந்த இலக்கியத்தின் இலக்கணம் இத்தன்மைத்து என்று வரையறுக்க முடியும்? இதை விளக்க அகத்தியம் கையாண்ட உவமை சிறந்த ஒன்று. முதற்பொருளாகிய எள் இருந்தாலன்றோ அதன்வழிப் பிழிந்தெடுக்கும் எண்ணெயைப் பெறமுடியும்? எள் இன்றேல், எண்ணெய் ஏது? அதுவே போன்று, இலக்கியம் இருந்தால்தானே அதன் வடிவையும்வடிக்க முடியும். இலக்கியமில்லையானல், பின் இலக்கணம் எப்படி உண்டாகும்? ஆம் இந்த உண்மையின் அடிப்படையை மறந்தவர்தாம் காரிகையை விட்டுப் பேரிகையை யடிக்க நினைப்பவர் என்பதில் ஐயமில்லை.

யாப்பிலக்கணத்தில் சொல்லியபடியே எழுத்தெண்ணிப் பாட முடியாதென்றால், பின் கவிதை உண்டாவதுதான்