பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

191



முதலில் நீரிலேதான் உயிர்த்தோற்றம் உண்டாயிருக்க வேண்டும் என்பதைக் கண்டோம். அதன் காரணத்தை - இன்றைய விஞ்ஞானிகள் நன்கு கண்டு தெளிந்து காட்டியுள்ளார்கள். நீரோ, நீர் வாயு பிராண வாயு என்ற இரண்டின் சேர்க்கையால் அமைவதென்பதை மேலே கண்டேர்ம். உயிர் வாழ்க்கைக்குப் பிராணவாயு இன்றியமையாது வேண்டப்படுவதாகும். அது நீரோடு கலந்து நீக்கமற நிறைந்து நிற்கின்ற காரணத்தினாலேதான் அங்கே உயிர்த்தோற்றம் எளிதாயிற்று 'என்பர். 'நிலத்தில் உயிர்க்காற்றாகிய பிராணவாயு இல்லையோ?” "எனின், உண்டு என்றுதான் கூற முடியும். எனினும், அதன் அழுத்தம் மிக அதிகமாகும். முதலில் தோன்றிய உயிர் அணுக்களும் (Cells) அவற்றை ஒட்டிய சிற்றுயிர்களும் அந்த அழுத்தம் மிகுந்த பிராணவாயுவைத் தாங்கும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. எனவே, அவை நீரோடு எளிமையில் கலந்துள்ள அந்தப் பிராணவாயுவினல் ஆரம்ப நாளில் - அந்நீரிலேயே தோன்றி வளர்ந்து வரலாயின.

தோன்றிய அந்த உயிரணு நீர் வாழ் பொருளாய் அமைந்திருந்தது. நீர்வாழ் மீனும் நிலத்தில் வாழ் தாவரமும் 'ஒரே காலத்தில் தோன்றினவா, அன்றி முன்பின் தோன்றினவா என்பதைத் திட்டமாக வரையறுத்துக்கூற இன்றும் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் முயல்கின்றனர். அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்து வரும் விஞ்ஞான இதழ்களில் இவை. பற்றிய கட்டுரைகள், எப்போதாவது வெளிவருகின்றன. இரண்டும் எவ்வாறு தோன்றின என்பதும், எது முன் எது பின் என்பதும் திட்டமாகக் கூறப்படாவிடினும், இரண்டும் ஒரே மூலப்பொருளிலிருந்துதான் தோன்றின என்பார்கள் விஞ்ஞானிகள். 'ஹைடிரா'[1] என்று அப்பொருளைக் குறிப்பர். இவற்றின் துணை கொண்டு நம் தொல்காப்பியனார் கருத்தை நாடின், ஒருவாறு உண்மை புலனாகும். அவர் அதில் புல்லையே முதல் தோன்றிய


  1. 1. HYDRA-common origin for plant and animal Life,