பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

193


 மரத்தை அடுத்து, நத்தையையும் இப்பியையும் தொல்கர்ப்பியர் கூறுகின்றார். மீன் இனம் பின்வரும் பிற இன்ங்களின் கிளையிலேயும் பிறப்பிலேயும் அடங்கும்போலும்!

தரையில் ஊர்ந்தும், நீரில் நெள்ந்தும் செல்லும் அத்த்கைய பாம்பு, நத்தை முதலிய உயிரினங்கள் நெடுங்காலம் வாழ்ந்தபின், பறப்பனவும், நடப்பனவுமாகிய பிற பறவைகளும் விலங்கினங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியிருக்க வேண்டும். ஒவ்வொரு தோற்றத்திற்கும் மாற்றத்திற்கும் இடையே ஊழிகள் பலப்பல கழிந்திருக்க வேண்டும். விலங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றின் தோற்ற வளர்ச்சிக்ளையெல்லாம் பலப்பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து நன்கு எழுதிப் பல்வேறு நூல்களில், வெளியிட்டிருக்கின்றார்கள். அவற்றையெல்லாம் ஆழ்ந்து ஆராய முற்படுவோமாயின், நாம் எடுத்த பொருளைப்பற்றி எழுதுவது தடைப்பட்டு நிற்கும் என்பது திண்ணம். அவைபற்றியெல்லாம் இன்னும் தமிழில் எழுதப்படவில்லை என்பது உண்மைதான். உயிர்த்தோற்றங்களைப் பற்றிய குறிப்புகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக மேலே *கண்டபடி நூல்களில் வருவதைத் தவிர்த்து, தனியாக உயிர்த்தோற்ற நிலைகளையும், அதன் வளர்ச்சியையும் வளர்ச்சியில் நேரும் பல்வேறு மாறுதல்களையும் விளக்கிக் காட்டும் நூல்கள் தமிழில் இல்லாமை.ஒருபெருங் குறைதான். எனினும், அவ்வகை நூல்கள் ஆங்கிலத்தில் நாள்தோறும் :புெருகிக் கொண்டே வருவதை யாவரும் அறிவர். ஆங்கில அறிவும், அருந்தமிழ் ஆர்வமும், பணியில் விருப்பமும் கொண்ட நல்ல அறிஞர்கள், இத்துறையில் கருத்திருத்தி, இவைபற்றிய நூல்களைத் தமிழில் கொண்டு வருவார்களாயின், அவர்களுக்கும் நாட்டுக்கும் ஒருசேரப் பயன் உண்டு என்பது தெளிவு. நாம் இத்துறையை இந்த அளவோடு நிறுத்திக் கொண்டு இனி,மனிதனின் தோற்றத்தையும், அவன் வளர்ந்து வாழ்வை வளப்படுத்தும் விதத்தையும் காணல் வேண்டும்.