பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

3. மனித வாழ்க்கை


தி மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபட்டுத் தனித் தன்மையெய்திப் பிறந்து விட்டானாயினும், விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிக்காக அவனை விலங்கினத்தில் சேர்த்தேதான் வைத்துள்ளார்கள். அவன் பூனை, நாய், குதிரை, ஆடு, மாடுகள் போன்றே பிறந்து தாய் முலைப்பாலுண்டு வளர்ந்து வருகிருன். அவ்வினத்தின் வழிச் சார்த்தி அவன் ‘மம்மல்’[1] என்றே வழங்கப்பெறுகின்றான். அவ்விலங்கினத்தில் அவன் பெரும்பாலும் குரங்கைச் சார்ந்தவன் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட கருத்து. தோற்றத்தாலும், பிறந்து பாலுண்டு வளர்வதாலும் மட்டுமன்றி, இரத்தத்தாலுங்கூட மனிதன் வளர்ச்சிபெற்ற குரங்கினத்தைச் சேர்ந்தவன் என்பதே ஆய்வாளர் முடிவாய் உள்ளது. ஆப்பிரிக்கா நாட்டு வாலில்லாக் குரங்குகளைக்[2] கொண்டு அவர்கள் செய்த சோதனையின் முடிவே இது.

இம் மனிதனை விலங்கு என்றே கூறுவார்களெனினும், அவற்றினின்று பிரித்துச் சமூகமாக வாழும் மனித விலங்கு[3]


  1. 1. Mammal
  2. 2. Chimpanzee
  3. 3. Man is a social animal,