பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

205


 விலங்குகளை விட்டுச் சிறுக சிறுக வேறு பிரிந்து சென்று கொண்டே, துன்பமற்று வாழக் குடிசை அமைத்தும், தற்காத்து வாழப் படை தேடிக்கொண்டும் வாழ்ந்து வந்தான் என்பது தேற்றம். அப்படிக் கற்காலத்து மனிதன் எத்தனை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தானோ? வரலாறு அதை இன்னும்,திட்டமாக:முடிவு செய்யவில்லை.

கற்காலத்துக்குப் பின்பு இரும்புக் காலமும், செம்புக் காலமும், பிற காலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டேயிருந்தன. அவற்றிலெல்லாம் மனிதன் வளர்ச்சி அடைந்துகொண்டே வந்தான் என்பது பொருந்தும். இன்று, இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்ற மனிதனுக்கும் அந்த ஆதி மனிதனுக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு கோடிகளுக்கு மிடையே மனிதன் எத்தனையோ மாறுதல்களைப் பெற்றிருக்க வேண்டும். அவை பற்றியெல்லாம், வரலாற்று ஆசிரியர்களும், உயிர்ப் பொருள் ஆராய்ச்சியாளர்களும், பிறரும் ஆராய்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். எங்கெங்கோ கிடக்கும் எலும்புகளையும் மண்டை ஒடுகளையும் கண்டு, அவ்வவற்றிற்கு உரிய மனிதன் இன்னின்ன காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கணக்கிட்டுச் சொல்லுகிறார்கள். எது எப்படியாயினும், தோன்றிய அந்த நாள் தொட்டு, மனிதன் சிறுகச் சிறுக, மாறி மாறி வளர்ந்துகொண்டேதான் இருக்கிறான் என்பது உண்மை.

முதல் மனிதன், பெற்ற உணவினை அப்படி அப்படியே தின்று வந்தான் எனக் கொள்ளவேண்டும். அக்காலத்தில் அவனுக்கு நெருப்பு உபயோகிக்கத் தெரியாது. நெருப்பு இருந்த போதிலும், அது காடுகளை அழிப்பதை அவன் கண்டிருப்பான்; மக்களை அல்லது விலங்குகளை அடியோடு ஒரு சேரப் பொசுக்கி அழித்ததை அவன் பார்த்திருப்பான். ஆனல், அந்தப் பொல்லாத பெரு நெருப்பு, உணவுப் பொருள்களைத் தன் நாக்குக்கு உருசியாக ஆக்கித் தரக்கூடிய ஒன்று என்பதை அவன் உணர்ந்திருக்க நியாயமில்லை. மேலை நாட்டு