பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

213


 தான் இருந்திருக்கவேண்டும். எப்படியோ வருந்தி வருந்திச் சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக வரவழைத்துப் பேசி, மக்கள், தங்கள் கருத்தை மற்றவர்களுக்கு விளக்கியிருப்பார்கள். அன்று பேசிய அவர்தம் மொழிக்கு எழுத்தும் சொல்லும், யாப்பும் அணியும் இருந்திரா. இலக்கியங்களும் இலக்கண நூல்களும் அவர்கள் அறியாதனவே. எப்படியோ காலப்போக்கில் உதட்டில் உருவான மொழி-உள்ளத்தை உணர்த்தும் மொழி -சிறிதுசிறிதாக வளர்ச்சியுற்றது என்று கூறலாம். அந்த ஆதி மொழி எப்படிப் பல்கிப் பெருகிற்று? -

மக்கள் ஒரே இடத்தில் தங்காமல், நெடுங்காலம் இடம் விட்டு இடம் சுற்றிக்கொண்டுதான் இருந்தார்கள். காடும் மலையும், வயலும் கடலும் அவர்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வழி காட்டின என்பதைக் கண்டோம். அவ்வாறு பிரிந்து சென்ற மக்கள், அவரவர் தங்கிய சூழ்நிலைக்கு ஏற்ப, நாட்டு நிலைக்கு ஏற்ப, கால நிலைக்கு ஏற்பத் தத்தம் மொழிகளை வகுத்துக் கொண்டார்கள் என்று நினைக்க வேண்டும். மனிதன் எப்படிக் காலநிலையில் கட்டுப்பாடின்றி வளர்ந்துகொண்டே வருகின்றானோ, அப்படியே மொழியும் அவன் கட்டுப்பாட்டுக்கு உட்படாது, இயற்கைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப வளர்ந்து கொண்டேதான் வருகின்றது. இந்த இயற்கை நியதியினலே தான் சில மொழிகள் தோன்றிச் சில காலமாயினும் விரைவில் வளர்ந்துகொண்டே வர, சில தோன்றி நெடுங்காலமாயினும், ஒரு நிலையில் நிற்பது போன்று அமைந்துள்ளன. இன்னும் சிலமொழிகள், தம் வளனும் வாழ்வும் பேச்சு வழக்கும் அற்று வீழ்ந்தும் விடுகின்றன. எத்தனையோ உயிரினங்கள் தோன்றி நிலைகெட்டும், மாறியும் வாழ்ந்தும் உள்ள அந்த நிலை, மொழிக்கும் பொருந்துவதாகும்.

பல்வேறு நாடுகளில் பல்வேறு சூழல்களுக்கு இடையில் மனிதன் வளர்த்த மொழிகளுள் சில நன்கு ஓங்கின; சில அழிந்து பட்டன; சில பேச்சு வழக்கில் உள்ளன; ஒரு சில, எழுத்து வழக்கில் உள்ளன. நெடுங் காலமாகியும் பேச்சு, எழுத்து என்ற இரண்டு வழக்கிலும் அழியாது வளர்ந்து