பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

கவிதையும் வாழ்க்கையும்



யில், மொழியும் நாகரிகமும் மட்டுமன்றிக் கலை முதலிய பிறவும் பங்கு கொள்ளுகின்றன. இக்காலத்தில் அவ்வந்நாட்டுக் கலை நலத்தையும் பிற பண்பாடுகளையும் ஆழ்ந்து அறிந்துகண்டு உலகுக்கு உணர்த்த ஒவ்வொரு நாடும் முன்னிற்கின்றது. அவ்வாறு மனிதனைப் பின்னிப் பிணைத்து வாழும் கலைச்செல்வங்களும் நம் நாட்டில் பல உண்டு. கலையே வாழ்க்கை என்னும் அளவுக்குச் சில சமுதாயங்கள் வாழ்ந்து வந்துள்ளன. இந்த மனித வாழ்க்கை முறையில் இன்னும் எத்தனையோ நற்பண்புகள் இடம் பெற்றுள்ளன. அவையெல்லாம் விரிப்பின் பெருகும்.

இறுதியாக ஒன்றைமட்டும் கண்டு மேலே செல்வோம். ஆதி மனிதன் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கண்டோம். அவன் வாழ்வோடு பின்னியவற்றையும் ஒருவாறு அறிந்தோம். எனினும், அவன் உள்ளத்தே தோன்றி வளர்ந்த மற்ருெரு வாழ்வையும் காணல் வேண்டும். உயிர்த்தோற்றத்தின் உச்ச நிலையில் சென்று நின்ற மனிதன், தான் நினைத்தபடி பல காரியங்களைச் செய்திருப்பான்; விலங்கோடு விலங்காக் வாழாமல் வேறுபட்டு, தான் உயர்ந்தவன் என்ற நிலையிலே மற்றவற்றை அடக்கியாள நினைத்து, அத்துறையில் கருத்திருத்தியிருப்பான்; பலவற்றைத் தான் நினைத்தபடியே நடத்தத் திட்டம் தீட்டியிருப்பான். காற்றையும் மழையையும், கனலையும் புனலையும் அவன் கட்டியாளக் கருத்திருத்தியிருப்பான். இன்றைய மனித சமுதாயம் அத்துறையில் கருத்திருத்தியிருப்பதை அறியாதார் யார்? தான் பிற உயிரினும் மேம்பட்டவன் என்ற எண்ணத்திலே ஆதி மனிதனும், அவனை ஒட்டிப் பின் வந்தவர்களும் பலப்பல செயல்களைச் செய்யத் துணிந்திருப்பார்கள். அச் செயல்கள் பலவற்றிலும் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கலாம்.என்றாலும், சிலவற்றில் அவர்தம் எண்ணம் கைகூடி யிராது. அக்காலத்தில் அவர் சிந்தனை சிறிது நீண்டிருக்கும். தான் எல்லா உயிரினும் மேலானவன் என்ற எண்ணத்தில் ஆற்றும் செயல் அனைத்தும் வெற்றி தருவதை விடுத்து, சிலவற்றில் தோல்வி