பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கவிதையும் வாழ்க்கையும்


என்று பாடினார். உண்மை இதுதான். எங்கே தூய உள்ளம் உண்டோ, அந்த இடத்திலிருந்து கவிதை வெள்ளம் புறப்பட்டு வர, அது வையத்தை வாழவைக்கும் தெள்ளிய நீரோடையாய்ச் சிறக்கின்றமையை உலகம் அறிந்துள்ளதே. மற்றோர் அடியவர்—ஆண்டவனைப் பாட வந்தவர்—இதே கருத்தை ‘உளங் குளிர்ந்த போதெலாம் உவந்துவந்து பாடுவன்,’ என்று கூறியிருக்கின்றாரே! இவற்றையெல்லாம் ஒத்து நோக்கின், கவிதை நல்ல உள்ளத்தில் தோன்றும் ஒன்று என்பதும், அக்கவிதையை அந்த நல்லவர்கள் தங்கள் உள்ளத்திலிருந்து உதடு வழியாக உலகுக்கு உதவி, தாம் இன்புறுவது உலகு இன்புறக் காணும் வகையில் பாடுவார்கள் என்பதும், அந்த வெள்ளப்பெருக்கு வையகத்தை வாழவைக்கும் என்பதும் உறுதி.

இவ்வாறு உள்ளம் தூயராய்க் கவிதைக் கலைஞராய் ஒரு சிலர் மட்டும் சிறந்து நிற்பதற்குக் காரணம் என்ன? உள்ளம் நல்ல கவிதைக்குப் பிறப்பிடம் என்று கண்ட காரணத்தினலே, அவ்வுள்ளத்தைப் பற்றி ஒரு சிறிது ஆராயின், கவிதையின் தோற்றத்தைப் பற்றியும் ஒருவாறு அறிந்துகொள்ள இயலும், உள்ளம் நல்லதா அன்றிக் கெட்டதா என்பதை அறிவது எப்படி? ஒருமை உணர்வே அதற்கு வழிகாட்டியாய் அமைவது. கவிஞன் தான் எடுத்துக்காட்ட விரும்பிய பொருளைப்பற்றி ஆழ்ந்து நினையாது, பல பொருள்களைப்பற்றி ஒடவிட்ட உணர்வுடையவனாய்ப் பாடத் தொடங்குவனுயின், அவன் கவிதை, கலை நிரம்பிய கவிதையாக முடியாது. எடுத்த ஒரு பொருள் பற்றி நன்கு விளக்க வேண்டுமாயின், தானே அப்பொருளானாலன்றி-அல்லது தான் வேறு அப்பொருள் வேறு என்ற நினைவு நீங்கினாலைன்றி-அல்லது அப்பொருள் பற்றிய ஒரு நினைவைத்தவிரப் பிற பொருள்களின் நினைவை உள்ளத்திலிருந்து நீக்கினாலைன்றி, அப்பொருள் பற்றிய கவிதை பிறக்க வழியில்லை.ஒன்றிய 'நல்ல் உள்ளந்தான் கவிதைக் கலையை உருவாக்கும். ஒன்றிய உள்ளமே கலைநலம் காணும் உள்ளம் என்பது துணிபு:அந்த ஒன்றும் உள்ளத்து ஊற்றுப்