பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

221


 அளவினைக் காட்டிலும் இந்த அண்ட கோளத்தின் அளவு எல்லை என்பதாகும். இவற்றின் விரிவையெல்லாம் விஞ்ஞானிகள் பற்பலர் நாள்தோறும் ஆராய்ந்துகொண்டே இராப்பகலற்று, ஒய்வு ஒழிவு அற்று, பல உண்மைகளை உலகுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றார்கள். ஒப்புமைப் படுத்தப்பெறும் இந்த எண்ணிக்கையின் அளவு, நம் சிந்தைக்கு எட்டாத ஒன்றாகும். நாம் முன்கண்ட பரிப்ாடல் என்னும் பழம்பாட்டில் கால எல்லைக்கு அப்புலவன் குறித்த ஏதோ ஒரு பேரெண் என்ற அளவிலேதான் எண்ணி அமையவேண்டியுள்ளது. [10% ]பங்கு என்ற கணக்கு, பார்ப்பதற்குச் சில எண்களால் ஆகியதுபோன்று தெரிகின்றது. ஆனால், அதை விரிவு படுத்திக் காணின், எழுதிக் காணின், கோடி கோடி கோடி கோடி எண்ணுக்கும் அப்பால் செல்லுவது புலப்படும். அதை எந்த எண்ணால் சொல்வது? இதைத்தான் அந்தப் பரிபாடற் புலவன், மனிதனது எண்ணிக்கையின் குறியீட்டில் அடங்காது என்று செய்குறியீட்டம் 'கழிப்பிய வழி முறை' என்று குறித்துச் சென்றான். இவ்வாறு அணுவின் சிறு துகள் தொடங்கி அண்டகோளத்தில் அகன்ற பரப்பெல்லை வரையிலே உள்ள இடை எல்லைக்கு ஒர் எல்லையாக இன்றைய மனிதன் அமைகின்றான் என்ற ஆராய்ச்சி காணும் இக்காலத்தில், நாம் வாழ்வது ஒரு பேறுதான். ஆம், இந்த மனிதனே இவற்றையெல்லாம் கண்டு கணக்கிடுகின்றான். மேலைநாட்டு விஞ்ஞானிகளது திறனெல்லாம் அழிவு வேலைக்கன்றி, ஆக்கவேலைக்குப் பயன்படுமாயின், இன்னும் எத்தனையோ உண்மைகளை வெகு விரைவில் நாம் உணர்ந்துகொள்ள முடியும். உலகம் அவ்வழியில் கருத்திருத்தின் நலமுண்டு. நாம் இதுபற்றிய கருத்தை இந்த அளவோடு நிறுத்தி, அந்த மனிதனுடைய வாழ்வு நெறி, எவ்வாறு அமைகிறதென்பதை இனிக் காண்போம்.

இதுவரை கூறியவற்றால், மனிதன் விலங்கிலிருந்து பிரிந்தும் அவன் சமூக விலங்காக வாழ்ந்தான் என்பதும், அவன் வெற்று உடலால் மட்டும் வளர்ச்சியடையாது உள்ளத்