பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

கவிதையும் வாழ்க்கையும்



காலத்தில் நிலவிய வாழ்க்கை முறைகளையெல்லாம் நூலில் தொகுத்துத் தருகின்றார். மனிதன் எவ்வாறு காட்டிலேயும் மலையிலேயும் தனித்தும் கூடியும் வாழ்ந்து, பின்னர்க் கடற் கரையிலும் ஆற்றங் கரையிலும் அமைந்து வாழ்ந்தான் என்பதைக் கண்டோம். அந்த நால்வகை நிலத்தில் வாழ்கின்ற மக்கள்தம் வாழ்வினை யெல்லாம் இவர் தனித்தனியாக எடுத்துக் காட்டுகின்றார். வீட்டில் காதன்மனையாளும் காதலனுங் கலந்து வாழும் இன்ப வாழ்வையும், நாட்டில் அனைவரும் கலந்து செயலாற்றும் பிற வாழ்வையும் பாகுபடுத்திக் காட்டுகின்றார், மனிதன் இவ்வுலகில் தன் வாழ்வுக்கு இன்றியமையாதன வெனக் கொண்டவை மூன்று. அவை, அறம், பொருள், இன்பம்' என்பன. சிலர் பின்னர் உயிர் செல்வதாகிய 'வீடு' என்ற ஒன்றையும் குறிப்பர். அது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின், இவ்வுலகில் பெறும் இம் மூன்றைப் பற்றியே தொல்காப்பியர் விளக்கமாகக் கூறுகின்றார். இவ்வுலகில் அறத்தாற்றின் பொருள் பெருக்கி, இன்பம் துய்த்து, தானும் வாழ்ந்து, உலகையும் வாழவைக்கும் வகைகளையெல்லாம் விளக்குகின்றார்; அந்த வாழ்வில் வழிவழியாக வந்த பொருள்களையும் சொற்களையும் மரபு பிறழா வகையில் வகைப் படுத்தியும் அடுக்கியும் காட்டுகிறார். இப்படி எல்லாவற்றையும், எல்லாப் பொருளையும் வாழ்வொடு பொருத்திப் பொருத்திக் காட்டி, அவ்வாழ்வையே இரு கூறாகப் பிரிக்கின்றார். அவையே அகம், புறம் என்பன. இந்த இரண்டு பொருளும் ஏதோ ஒரு காலத்தில் இருக்கும்; மற்ருெரு காலத்தில் இல்லாது கழியும் என்று கருதவேண்டாவென்றும், இவையே வாழ்க்கையாதலின், இவை எக்காலத்தும், உலகமும் உயிரும் வாழும் வரையிலும் நிலை பெற்று உள்ளன என்றும், இவ்வுலகமன்றி சமயத்தார் கூறும் வேறு உலகம் செல்லினும், அங்கும் இவை வழக்காறே என்றும் குறித்து, 'இமையோர் தேஎத்தும் ஏழ்கடல் வரைப்பினும் அவையில் காலம் இன்மையான' என்றும் திட்டமாக வரையறுத்துக் கூறுகின்றார் அவர்.

இனி, அவர் காட்டிய அகமும் புறமும் எவை என்று காண்பதே வாழ்க்கைக் கூறுபாடுகளை அறிவதாகும் எனத்